டெல்லி Vs பஞ்சாப் : புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வருமா பஞ்சாப் அணி…???

டெல்லி Vs பஞ்சாப் : புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வருமா பஞ்சாப் அணி...???

10 அணிகளுக்கிடையான இடையிலான 18வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில், இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் 66வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி பங்கேற்ற 12 போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 3 தோல்வி, ஒரு டிரா என 17 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டெல்லி அணி 13 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிரா என 13 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

தற்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, முதலிடத்திற்கு முன்னேற முடியும் என்பதால், இந்தப் போட்டியில் வெற்றி பெற கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.மறுபுறம், டெல்லி அணி இந்த சீசனை வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் இருக்கும்.

எனவே இந்த இந்த போட்டிக்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.