தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!!

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி..!!!

பதும் தானி:இந்திய அணி, வரும் 10-ம் தேதி பதும் தானியில் நடைபெறும் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.

இதற்கான ஆயத்தமாக, நேற்று இந்தியா-தாய்லாந்து அணிகள் நட்பு ரீதியான போட்டியில் விளையாடின.

தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியானது 99வது தரவரிசையில் உள்ள தாய்லாந்து அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

2027 ஆசிய கோப்பை சவுதி அரேபியாவில் நடைபெறும். தகுதிச் சுற்றின் மூன்றாவது சுற்றில் 24 அணிகள் (6 பிரிவுகள்) பங்கேற்கும்.

உலக தரவரிசையில் 127வது இடத்தில் உள்ள இந்தியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் வங்கதேசத்துடன் குரூப் சி-யில் உள்ளது.

மேலும் இந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் நட்பு போட்டியில் பங்கேற்றது.

போட்டியின் முதல் பாதியில் இந்திய அணி 0-1 என்ற நிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் இந்திய அணிக்கு பல வாய்ப்புகள் இருந்தும் கோல் அடிக்க சாதகமான சூழ்நிலை இல்லாததால் இந்திய அணி 0-2 என்ற கோல்ட் கணக்கில் தோல்வி அடைந்தது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan