துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா?

எந்த சூப்பர் ஸ்டார் நடிகர் புர்ஜ் கலீஃபாவில் 29வது மாடியில் பிளாட் வாங்கியுள்ளார்.
புர்ஜ் கலீஃபா துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. உலகின் மிக உயரமான கட்டிடம் இது . இதில் சினிமா டிரைலர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒளிப்பரப்படும்.
இந்த புர்ஜ் கலீஃபாவில் ஒரு இந்திய நடிகருக்கு சொந்தமாக பிளாட் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
இந்தியாவில் பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இருந்தாலும், புர்ஜ் கலீஃபாவில் பிளாட் வைத்திருக்கும் ஒரே நடிகர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மட்டும் தான் என்று கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பிளாட்கள் வாங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் மோகன்லாலும் இடம்பெற்றுள்ளார்.அவர் அந்த கட்டிடத்தில் மோகன்லால் 29வது மாடியில் ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அவர் வாங்கியுள்ள பிரம்மாண்ட பிளாட்டின் மதிப்பு மட்டும் ரூ. 3.5 கோடி. அவர் தனது காதல் மனைவியான சுசித்ரா லால் பெயரில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
