உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு இரண்டாவது இடம் முதலிடம் யார் என்று தெரியுமா?

உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் தரவரிசையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு இரண்டாவது இடம் முதலிடம் யார் என்று தெரியுமா?

“விமானப் போக்குவரத்துத் துறையின் ஆஸ்கார் விருதுகள்” என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ் ஆலோசனைக் குழுவான SKYTRAX இன் “உலகின் சிறந்த விமான நிலையங்கள்” பற்றிய சமீபத்திய தரவரிசை வெளியாகியுள்ளது.

SKYTRAX 2025 உலக விமான நிறுவன விருதுகளின் முடிவுகளை செவ்வாய்க்கிழமை (17.06.25) அறிவித்தது.

ஐந்து முறை முதலிடத்தை வென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் பிடித்தது.

இந்த ஆண்டு விமானப் போக்குவரத்துத் துறை வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த பயணிகளிடமிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு மே வரை கருத்துகளை சேகரித்தது.

இதில் கிட்டத்தட்ட 325க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களை பயணிகள் மதிப்பிட்டனர்.

உலகின் சிறந்த விமான நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் ஒன்பதாவது முறையாகவும் மீண்டும் உலகின் சிறந்த விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டது.ஐந்து முறை இந்தப் பட்டத்தை வென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

கேத்தே பசிபிக் ஏர்வேஸ் இந்த ஆண்டு இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தன.

இந்த ஆண்டு உலகின் சிறந்த கேபின் க்ரூ விருதையும் உலகின் சிறந்த முதல் வகுப்பு விருதையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது ஆசியாவின் சிறந்த விமான நிறுவனமாகும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் கீழ்,குறைந்த கட்டணத்தில் தொலைதூர பயணச் சேவையை வழங்கும் விமான நிறுவனங்களில் ஸ்கூட் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

கூடுதலாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்த ஸ்டார் அலையன்ஸ், மீண்டும் உலகின் சிறந்த விமானக் கூட்டணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan