பாஸ்வேர்டாக இதை கொடுக்க வேண்டாம்? தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசனை!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

பாஸ்வேர்டாக இதை கொடுக்க வேண்டாம்? தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசனை!! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்.....

தனியார் நிறுவனங்கள் அடையாள அட்டை எண்ணை பாஸ்வேர்டாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.இதனை தகவல்,மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து தனி நபர் தகவல் பாதுகாப்பு ஆணையமும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பும் அதிகாரபூர்வ ஆலோசனையை வெளியிட்டுள்ளன.

காப்பீட்டு ஆவணங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களுக்காக தனியார் நிறுவனங்கள் ஒருவரின் அடையாள அட்டை எண்ணை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் நடைமுறை தற்போது இருப்பதாக அமைச்சகம் கூறியது.

ஆனால் அது தனிப்பட்ட தகவல்களை மற்றொருவர் பெறுவதற்கு அது எளிதாக அமையும் என்று அமைச்சகம் கூறியது.

மேலும் இ-மெயில் வழியாக அனுப்பப்படும் ஆவணங்களுக்கு பாஸ்வேர்டாக அடையாள அட்டை எண்ணை எந்த விதத்திலும் பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சகம் வலியுறுத்தியது.

கை ரேகை,வலுவான பாஸ்வேர்ட் மற்றும் பாதுகாப்பு கருவி போன்றவற்றை மக்கள் பயன்படுத்தி ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan