வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு!! PART-1

வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு!! PART-1

சிங்கப்பூரில் வேலை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது.

ஏனென்றால் சிங்கப்பூரில் அதிக சம்பளம் மிகவும் பாதுகாப்பான நாடு அது மட்டும் இல்லாமல் தமிழர்கள் அதிகம் வாழும் இடம் என்பதால் பலரும் சிங்கப்பூர் செல்வதையே விரும்புகின்றனர்.

ஆனால் தற்பொதைய சூழ்நிலையில் சிங்கப்பூரில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது.

சிங்கப்பூரில் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ள காரணத்தால் பலரும் இதற்காக காத்திருக்கும் நாட்கள் மிகவும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

சிங்கப்பூரில் ஒரு வேலை வாய்ப்பு வருகிறது என்றால் அதற்கு ஆயிரம் பேர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் வேலை கிடைக்கப் போவது ஒருத்தருக்கு தான். இது போல தான் இப்போது சிங்கப்பூரின் நிலை உள்ளது.

இதை பல ஏஜெண்டுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பலரிடம் வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை வாங்கிக் கொள்கின்றனர்.ஆனால் அவர்களுக்கு எந்தவித வேலை வாய்ப்பும் அமைத்து தருவது இல்லை.

ஒரு சில ஏஜெண்டுகள் பொய் சொல்லி தவறான வேலைக்கு அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.

ஒரு சிலர் அதிகமான பணத்தை வாங்கிக் கொண்டு குறைந்த சம்பளத்துக்கு அனுப்புகின்றனர்.

இதனால் சிங்கப்பூர் செல்பவர்கள் அவர்கள் ஏஜெண்டிடம் கட்டிய பணத்தை சம்பாதிக்காமல் நாடு திரும்புகின்றனர்.

தற்போது சிங்கப்பூர் செல்பவர்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஆகையால் நீங்கள் வெளிநாட்டுக்கு முயற்சி செய்யும் போது முடிந்தவரை அரசு அனுமதி பெற்ற ஏஜெண்டுகளை தேர்ந்தெடுக்கவும் . அதேபோல் உங்கள் சம்பளம் மாதம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தது போல் நீங்கள் பணம் கட்டி சென்றால் மட்டுமே உங்களால் ஜெயிக்க முடியும்.

வேலை கிடைத்தால் போதும் நாம் வெளிநாடு சென்றால் போதும் என்று நினைக்காமல் அங்கு சென்று சரியான சம்பளத்தில் நீங்கள் வேலை செய்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும் . இல்லை என்றால் நீங்கள் கட்டிய பணத்தை கூட சம்பாதிக்காமல் நீங்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இனி வரும் பதிவுகளில் நீங்கள் நல்லபடியாக எப்படி வெளிநாடு செல்வது என்பதை பற்றியும் அரசு அனுமதியுடன் இயங்கும் ஏஜெண்டுகளை பற்றியும் காணலாம். நமது SGTAMILAN பக்கத்தை தொடர்ந்து இணைந்திருந்தீர்கள் என்றால் நீங்கள் நல்லபடியாக வெளிநாட்டிற்கு செல்ல முடியும். ஒரு சில அரசு அனுமதி பெற்ற ஏஜெண்டுகளின் வேலைவாய்ப்பு தகவலை நமது sgtamilan whatsapp குரூப்பில் பதிவிடுகிறோம். எனவே நமது sgtamilan whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளவும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan