பறந்து சென்ற முதலாளி...!!!சொகுசு கார் விற்பனையில் வெளிவந்த அதிர்ச்சி...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் S$ 3 பில்லியன் மதிப்புள்ள போலி பண மோசடி வழக்கில் தொடர்புடைய ஒருவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் சூ பிங்ஹாய் எனும் நபரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர்.
அவர் தனது முதலாளியின் சொகுசு கார்கள் குறித்து போலீசாரிடம் பொய் சொன்னதாக புகார் அளிக்கப்பட்டது.
லியூ யிக் கிட், 42 என அடையாளம் காணப்பட்ட அந்த நபருக்கு திங்கள்கிழமை (ஜூன் 30) மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய கள்ளப் பணமோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் சிங்கப்பூரர் இவர்தான்.
இந்த $3 பில்லியன் போலி பணமோசடி வழக்கு தொடர்பாக பத்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கப்பூர் திரும்பியதும், அவர் நான்கு கார்களையும் ஓட்டிச் சென்று,அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தினார். அவற்றை விற்கவும் ஏற்பாடு செய்தார்.
‘புரோகார்ஸ்’ என்ற நிறுவனம் மூலம் நான்கு கார்களையும் விற்க லியூ ஏற்பாடு செய்தார்.
இது தொடர்பாக செப்டம்பர் 11, 2023 அன்று போலீசார் அவரை விசாரித்தனர்.
லியூ தனது முதலாளி எந்த விலையுயர்ந்த பொருட்களையும் விட்டுச் செல்லவில்லை என்று பொய் சொன்னார்.
காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காக அந்த நான்கு கார்களையும் அப்பர் பூன் ஹெங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தினார்.
ஆனால் அக்டோபர் 5, 2023 அன்று, சூவின் நீல நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ராக்சி ஸ்குவேர் வாகன நிறுத்துமிடத்தில் இருப்பதாக போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
லியூ அந்த காரையும் விற்க ஏற்பாடு செய்திருந்தார்.
கார்களை விற்க லியு ஏற்பாடு செய்ததாக கார் டீலர்ஷிப் போலீசாரிடம் தெரிவித்தது. பின்னர் லியு கைது செய்யப்பட்டார்.