ஆசிய நாடுகளில் துணிச்சலான சீர்திருத்தம் அவசியம் தேவை!!
ஆசிய நாடுகளில் துணிச்சலான சீர்திருத்தம் அவசியம் தேவை!!
ஆசிய நாடுகளுக்கான அதிகாரத்துவ பயணத்தை நிறைவு செய்த சிங்கப்பூர் பிரதமர் திரு வோங் அவர்கள் சமூக ஊடகத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் , முதலீடு ஆகியவற்றிற்கான தடைகளை குறைக்கவும், உள் கட்டமைப்புகளை இணைக்கவும், ஆசியாவிற்குள் துணிச்சலான சீர்திருத்தங்கள் தேவை என்றார் அவர்.
காலத்திற்கு ஏற்ப வலுவாகவும், துடிப்புமிக்கதாகவும், ஆசியா திகழ வட்டார உலக நட்பு நாடுகளுடன் சிங்கப்பூர் அணுக்கமாய் பணியாற்றும் என்று சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்.
ஆசிய நாடுகளே சிங்கப்பூரின் நெருக்கமான நட்பு நாடுகள் என்பதை பிரதமர் கூறினார்.அனைத்து ஆசிய நாடுகளுடன் சிங்கப்பூருக்கு இருதரப்பு உறவு உள்ளது என்றும் கூறினார்.
மியான்மர் நாட்டைத் தவிர ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு திரு வோங் சென்றிருந்தார்.
பொருத்தமான சூழல் வாய்த்தால் மியன்மாருக்கும் செல்ல முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.