பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!! கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முன்னணி கத்தோலிக்க பிரமுகரான கார்டினல் கோ செங் சாய் பெயரில் மின்னஞ்சல் மோசடிகள் அதிகரித்துள்ளது.

மேலும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

சிங்கப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டம் ஜூன் 30 அன்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

குற்றவாளிகள் cardinal.goh@gmail.com மற்றும் archbishop.goh@gmail.com போன்ற அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மோசடி செய்திகளை அனுப்புவதாகவும், உண்மையான உரையாடல்களின் உள்ளடக்கத்தை மறைத்து பல மோசடிகளை செய்வதாக குறிப்பிட்டது.

மேலும் மோசடி நபர்கள் பல பரிமாற்றங்கள் மூலம் தவறான நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், பின்னர் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதாக கூறியது.

எனவே பொதுமக்கள் இந்த மோசடி குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும் தெரிவித்தது.

பொதுமக்கள் @catholic.org.sg உடன் முடிவடையும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று மறைமாவட்டம் வலியுறுத்தியது.

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் முகவரி அல்லது பிற சந்தேகத்திற்கிடமான முறையில் பொதுமக்கள் இணையத்தில் இருந்து செய்திகளைப் பெற்றால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் அதை நம்பகத்தன்மையை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மின்னஞ்சல்களைத் தவிர, பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட பல தளங்களிலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட மற்றும் சமூக பாதுகாப்பைப் உறுதி செய்ய மின்னஞ்சல் முகவரிகளை கவனமாகச் சரிபார்க்கவும். மேலும் வலைத்தளங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும்.

ஆன்லைன் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் மறைமாவட்டம் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

நம்பகமான ஆதாரங்கள்:

பொதுமக்கள் மோசடிகளை தடுப்பதற்காக பின்வரும் தளத்தை பயன்படுத்தலாம்.

* https://www.scamshield.gov.sg/
* https://www.csa.gov.sg/
* https://www.catholic.sg/scams-fake-news/

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan