டம்பைன்ஸ் விரைவுச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??

டம்பைன்ஸ் விரைவுச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூர்: டம்பைன்ஸ் விரைவுச்சாலையில் நேற்று (ஜூலை 30) இரவு திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கல்லாங்-பாயா லெபார் விரைவுச் சாலைக்கு பிறகு, செலேட்டர் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் டம்பென்ஸ் விரைவுச் சாலையில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது.

TADA டிரைவர்ஸ் கிளப் என்ற முகநூல் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது.

அந்த காணொளியில் காரின் முன் பகுதி தீப்பிழம்புகளால் சூழப்பட்டு, புகைமண்டலமாக வெளியேறிய நிலையில் சாலை நிறுத்தப்பட்டிருப்பது தெரிகிறது.

இந்த சம்பவத்தால் டம்பைன்ஸ் இணைப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இரண்டாவது மற்றும் மூன்றாவது வழித்தடங்கள் பாதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் அந்த வழித்தடங்களைத் தவிர்க்குமாறும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் ஒரு தனியார் வாடகை கார் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்த தகவலானது சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு இரவு 7:40 மணியளவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நீர்த்தாரைப் பீரங்கிகள் மற்றும் இரண்டு தீயணைப்பு குழாய்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவுச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் காரணமாக, அந்த வழியாக இயக்கப்படும் 13 பொதுப் பேருந்து சேவைகள் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகி உள்ளன.