SSG திட்டத்தில் அறிமுகம் காணும் கட்டாய பதிவு நடைமுறை…!!! இதோ முழு விவரம்…!!

SSG திட்டத்தில் அறிமுகம் காணும் கட்டாய பதிவு நடைமுறை...!!! இதோ முழு விவரம்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2026 ஏப்ரல் 1 முதல் SkillsFuture Singapore (SSG) பயிற்சி வழங்கும் வயதுவந்தோர் கல்வியாளர்கள் அனைவரும் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய கல்வியாளர் பதிவேட்டில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

இந்த புதிய முயற்சி, இன்று (07.07.25)தொடங்கிய SkillsFuture Festival 2025 விழாவில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெளியிட்ட அறிவிப்பின் மூலம் அறிமுகமானது.


📘 புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

♦️ கல்வியாளர்கள் தொடர்ந்து தங்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும்.

♦️ பயிற்சி நேரம் மற்றும் நடைமுறை அனுபவம் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு பூர்த்தி செய்ய வேண்டும்.

♦️ பதிவு செயல்முறை 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தொடங்கும்.

♦️ திட்டம் 2026 ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக அமலுக்கு வரும்.


🤝 தொழில்துறை இணைப்பு – UOB முனைப்பு:

UOB வங்கியும் SkillsFuture Singapore-உம் இணைந்து, மூன்று ஆண்டு ஒத்துழைப்பில் கீழ்க்கண்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

⚡️செயற்கை நுண்ணறிவு

⚡️டிஜிட்டல் மாற்றம்

⚡️நிலைத்த தொழில் வளர்ச்சி

இந்த திட்டத்தில் 200 SME நிறுவனங்கள் மற்றும் 800 SME ஊழியர்கள் பயனடைகின்றனர்.
இந்த பயிற்சி திட்டங்கள், Singapore National University, Nanyang Technological University மற்றும் Ngee Ann Polytechnic ஆகிய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும்.

🏛️ Lifelong Learning Singapore – புதிய அடையாளம்:

முன்னதாக “Lifelong Learning Institute” என அழைக்கப்பட்ட அமைப்பிற்கு, இப்போது “வாழ்நாள் கற்றல் சிங்கப்பூர்” என புதிய பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், புதிய ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது.இது தொழில்முறை வழிகாட்டல் மற்றும் தற்போதைய வேலை வாய்ப்புகள், திறன் தேவைகள் பற்றிய நுண்ணறிவு என பல்வேறு சேவைகளை வழங்குகிறது.


🎉 SkillsFuture Festival 2025:

ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 18 வரை நடைபெறும். இந்த விழாவில், தீவு முழுவதும் 150க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்ற பயிற்சி, கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

📌 இது தொடர்பான தகவலை மேலும் அறிய:
🌐 www.skillsfuturefestival.sg என்ற வலைதள பக்கத்தை பார்வையிடவும்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan