சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு வரும் புதிய அப்டேட்!!
சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கு வரும் புதிய அப்டேட்!
இவ்வாண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரில் உள்ள மின்சார வாகன மின்னூட்டு கருவிகளின் அதிவேக மின்னூட்டங்கள் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 200 கிலோமீட்டர் செல்ல தேவையான மின்சாரத்தை வாகனங்களுக்கு ஐந்து நிமிடங்களில் உங்களால் சார்ஜ் செய்யும் வசதி இந்த அதிவேக மின்னூட்டும் கருவி கொண்டிருக்கும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள கருவிகள் வாகனத்திற்கு மின்னூட்ட 40 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.
இந்த அதிவேக மின்னூட்டிகளை சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹீவாவேய் உற்பத்தி செய்துள்ளது.