இளமையுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டுமா..?? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..!!

இளமையுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டுமா..?? அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க..!!

நீண்ட ஆயுளுக்கு தினமும் சாப்பிட வேண்டிய பழங்கள்
பழங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. எல்லா பழங்களும் ஊட்டச்சத்துக்களை கொண்டவை, உடல் நலம் காப்பவை என்றாலும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு குறிப்பிட்ட பழங்கள் கூடுதல் பலன்களை அளிக்கின்றன.

குறிப்பாக இதயத்தை வலுப்படுத்தவும், ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்கவும், செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவிடும்.

புளூ பெர்ரி: ரத்த நாளங்களின் பாதுகாவலர்
புளூ பெர்ரி பழத்தில் ஆந்தோசயனின்கள் எனப்படும் சேர்மங்கள் நிறைந்துள்ளன. செல்களின் பாதுகாவலர்களாக கருதப்படும் இவை ரத்த நாளங்களை தளர்வாகவும், நெகிழ்வாகவும் வைத்திருக்க உதவிடும்.

அதாவது ரத்தம் தடையின்றி உடலுக்குள் சீராக பயணித்துக்கொண்டிருக்கும். அதனால் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்காது.
தினமும் ஒரு கப் (சுமார் 150 கிராம்) புளூபெர்ரி சாப்பிட்டவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகவும், தமனி செயல்பாடு சிறப்பாகவும், நல்ல கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ரத்த நாளங்களில் ஒரு மெல்லிய உள் அடுக்கு (எண்டோதீலியம்) உள்ளது. அது ஆரோக்கியமாக இருக்கும்போது, ரத்த நாளங்கள் சீராகத் திறந்து மூடும். புளூபெர்ரி அந்த அடுக்கு சீராக செயல்பட வைக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்தக் கட்டிகளை தடுக்கவும் செய்யும்.

ஆப்பிள்கள்: கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆப்பிள்களில் பெக்டின் எனப்படும் சிறப்பு நார்ச்சத்தும், ரத்த ஓட்டத்தை தூய்மைப்படுத்தும் குழுக்களாக செயல்படும் பாலிபினால்கள் போன்ற சேர்மங்களும் நிறைந்துள்ளன. அவை கெட்ட கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்.) தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே வெளியேற்ற உதவிடும். தினமும் சுமார் 100 முதல் 150 கிராம் அளவு கொண்ட ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் குறையும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கொலஸ்ட்ரால் என்பது ரத்த குழாய் சுவர்களில் ஒட்டிக்கொண்டு ரத்த ஓட்டத்தை தடுக்கும் அழுக்கு போன்றது. ஆப்பிள் அந்த அழுக்கு ஒட்டுவதற்கு முன்பே அகற்றிவிடும் தன்மை கொண்டது. ஆப்பிள்களில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டுகள், ஆரம்பத்திலேயே கொலஸ்ட்ராலின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன.

ஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் வைட்டமின் சி, சரும செல்களை பாதுகாக்கும். அதிலிருக்கும் பொட்டாசியம் உடலில் சேரும் அதிகப்படியான உப்பை அகற்ற உதவிடும். இவை இரண்டும் சேர்ந்து ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து, இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க துணை புரியும். உலகளவில் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை தவறாமல் சாப்பிட்டவர்களுக்கு இதய நோய் ஏற்படும் விகிதம் குறைவாக இருப்பதும், அவர்கள் நீண்ட காலம் வாழ்வதும் கண்டறியப்பட்டுள்ளது.

வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகிய இரண்டுமே ஆரோக்கியமான ரத்த நாளங்களின் செயல்பாட்டிற்கு நேரடியாக உதவுகின்றன. பொட்டாசியம், ரத்த நாளங்களின் சுவர்களை தளர்த்தக்கூடியது. வைட்டமின் சி, ரத்த குழாய்களை வலுவாகவும், நெகிழ்வாகவும் வைத்திருக்க உதவும். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிடுவது குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK