விட்லி சாலையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!!

விட்லி சாலையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!!

சிங்கப்பூர் விட்லி சாலை அருகே உள்ள தரைவீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஆனது (ஜூன் 24) நேற்று அதிகாலை நேரத்தில் நடந்தது என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த சன்று அதிகாரிகள் பார்வையிட்ட போது வீட்டின் இரண்டாம் தள பால்கனியிலிருந்து இரண்டு பேரையும் முதல் தளத்திலிருந்து இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்த 7 பேரில் புகையை 5 பேர் சுவாசித்ததால் மயக்க நிலைக்குச் சென்றனர். இதனால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இரண்டு பேரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.

இந்த தீ விபத்தானது வீட்டின் முதல் இரண்டு தளங்களில் நிகழ்ந்துள்ளது மேலும் அடர்ந்த புகையினால் வீட்டின் மூன்றாவது தளமும் சேதமடைந்துள்ளது.

ஒருவழியாக தீயணைப்பு வீரர்கள் நான்கு தண்ணீர் குழாய்களை பயன்படுத்தி இறுதியாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK