சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்…!!!! இது பற்றிய முழு தகவல் அறிய இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.

சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்...!!!! இது பற்றிய முழு தகவல் அறிய இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்.

சிங்கப்பூர்: கடந்த மாதம் ஜூலை 1 2025 முதல் வெளிநாட்டு வாகன நுழைவு(VEP ) அனுமதியின்றி மலேசியா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் ஆண்ட்டனி லோக் அறிவித்திருந்தார்.

கடந்த மாதம் ஜூலை (2025) 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 வரை 14,379 ஓட்டுநர்கள் சோதிக்கப்பட்டனர். அவர்களில் ஏறக்குறைய 90 விழுக்காட்டினர் வாகனங்களில் VEP வில்லைகளை பொருத்தியுள்ளனர்.  அதாவது, 10 விழுக்கட்டினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை(JPJ) வெளியிட்ட அறிக்கையானது:
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் 1,500  உரிமையாளர்களுக்கு விதி மீறலுக்காக சுமார் 136,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபராதம் விதிக்கப்பட்ட 1,489 வாகன உரிமையாளர்கள் தேவையான ரேடியோ அதிர்வெண் அடையாள(RFID) குறிச்சொற்களைச் செயல்படுத்தவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் மலேசியா அரசாங்கத்தின் அமலாக்க முயற்சிகள் குறித்து அறியவில்லை என கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த மாத நிலவரப்படி, சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு 277,930 நுழைவு அனுமதி குறிச்சொற்களை வழங்கியதாகவும், இது தனியார் மற்றும் நிறுவன வாகனங்களை உள்ளடக்கியுள்ளது என்ற அறிக்கையை நிலப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. இதில் 90 விழுக்காட்டினர் தனியார் கார் உரிமையாளர்கள் இந்த குறிச்சொற்களை நிறுவி செயல்படுத்தியுள்ளனர்.

மேலும், சிங்கப்பூர் வாகன ஓட்டிகள் அதிகம் வரும் முக்கிய இடங்களில் அதிகாரிகள் சிங்கப்பூர் வாகனங்களை தொடர்ந்து ஆய்வு செய்வார்கள் எனவும் மலேசியா அமைச்சு கூறியுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan