அதிபர் ஆலோசனை மன்றத்தில் புதிய உறுப்பினர் யார்?

அதிபர் ஆலோசனை மன்றத்தில் புதிய உறுப்பினர் யார்?

சிங்கப்பூர்: பிரதமரின் ஆலோசனைப்படி அதிபர் மாற்று உறுப்பினராக புதிய உறுப்பினரை நியமித்துள்ளார். புதிய உறுப்பினர் இந்த பொறுப்பில் 4 ஆண்டு காலம் இருப்பார்.

DBS வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தா அதிபர் ஆலோசனை மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு பியூஸ் குப்தா 2009 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு 2025 மார்ச் மாதம் வரை DBS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இயக்குனராகவும் பொறுப்பு வகித்தார்.

இவருடைய தலைமை பொறுப்பின் கீழ் DBS பெரும் மாற்றங்களை கண்டது. உலகின் சிறந்த வங்கி எனும் அங்கீகாரத்தை பலமுறை பெற்றுள்ளது.

சிங்கப்பூருக்கு ஆற்றிய சேவைக்கு 2020 ஆம் ஆண்டு திரு பியூஷ் குப்தாவுக்கு பொதுசேவை நட்சத்திர விருது வழங்கப்பட்டது.

இந்திய அரசாங்கம் 2023 ஆம் ஆண்டில் இவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் எனும் உயரிய விருதை வழங்கியது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan