NTU வளாகத்தில் அதிர்ச்சி..!! வைரலாகும் இளைஞரின் வீடியோ..!!!

NTU வளாகத்தில் அதிர்ச்சி..!! வைரலாகும் இளைஞரின் வீடியோ..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக (NTU) வளாகத்தில் நிர்வாணமாக நடந்து சென்ற 22 வயது இளைஞர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9.11.25) காலை 10 மணியளவில் நன்யாங் கிரசண்ட் பகுதியில், 110 நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கருகே நடந்தது.

ஒரு இணைய பயனர் Reddit தளத்தில் @katongnuggets என்ற பெயரில் பதிவேற்றிய குறுகிய காணொளியில், இளைஞர் நிர்வாணமாக வளாகத்தில் நடந்து சென்றது தென்படுகிறது.

அன்று காலை சுமார் 10.15 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்த பின்னர், பொது இடத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதற்காக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK