உட்லண்ட்ஸ் சென்டர் சாலையில் நேற்று(டிசம்பர் 6) கனரக லாரியும் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவரை உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்தை ஜோகூரில் உள்ள “இரு சோதனை சாவடி” என்ற facebook குழுவில் பதியேற்றியுள்ளனர். இந்த காணொளியின் மூலம் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் கிடந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்து சாலையில் விழுந்து கிடந்துள்ளார்.
மேலும் இந்த காட்சியில் மஞ்சள் சட்டை அணிந்த ஒரு நபர் தனது மொபைல் போனை பயன்படுத்துவது போல் உள்ளது. அந்த நபரின் சட்டையில் ‘KKL’ என்று அச்சிடப்பட்டிருந்த ஒரு லோகோ இருந்தது.
KKL லோகோ உடன் லாரியும் சில மீட்டர் தொலைவில் இருந்ததை காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டது.