T20 உலக கோப்பை இந்திய அணி அறிவிப்பு..!! யார் தலைமையில்..??
வருகின்ற “டி20 கிரிக்கெட் உலக கோப்பை- 2026” தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்தியாவும் இலங்கையும் இணைந்து இந்த உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. ஒரு மாதம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தமாக 55 ஆட்டங்கள் உள்ளன. இதில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கின்றன.
இவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தத் தொடரில் இந்திய அணியை சூரியகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் துணை கேப்டனாக அக்சர் படேல் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
A பிரிவில் நடப்புச் சாம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான், நமீதா, நெதர்லாந்து, அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளனர்.