பொதுவெளியில் நடந்த கொடூர தாக்குதல்..!! போலீஸ் விசாரணை..!!

பொதுவெளியில் நடந்த கொடூர தாக்குதல்..!! போலீஸ் விசாரணை..!!

சிங்கப்பூர்:ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஷாப்பிங் மாலில் ஒரு ஆண் முரட்டுத்தனமாக பெண்ணை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஆன்லைனில் பரவி வரும் காணொளியில், ஒரு உணவகத்தில் இருந்த ஆண் மற்றும் பெண் இடையே தகராறு ஏற்பட்டது தெரிகிறது.அந்த ஆண்,பெண்ணை இழுத்துத் தள்ளி தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்குப் பின்னர், அந்தப் பெண் அருகில் இருந்தவர்களால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த ஆண் அவரை தொடர்ந்து பின்தொடர்ந்ததாகவும் காணொளியில் தெரிகிறது.

காவல்துறை, சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 8ஆம் தேதி லக்கி பிளாசாவில் இதே போன்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் பாதிக்கப்பட்டவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தியுள்ளது.தேவையான உதவிகளை வழங்க அவரைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும்,அவரது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய நிலைமையை கவனமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK