சிங்கப்பூர் குடிநுழைவில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!!

சிங்கப்பூர் குடிநுழைவில் 2026 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூருக்குள் நுழைவதிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை சுமார் 41,800 வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தப்பட்டு,குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 26 சதவீதமும், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 46 சதவீதமும் அதிகரித்துள்ளதாக குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டுக்குள் நுழைவதற்கான தடை உள்ளவர்களை முன்கூட்டியே தடுக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2026 ஜனவரி முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், எமிரேட்ஸ், டர்கிஷ் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இந்த நடைமுறையை அமல்படுத்தவுள்ளன. நுழைவு தடை உள்ளோர் இனி விமானங்களில் கூட அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மேலும் பல விமான நிறுவனங்கள் இந்த திட்டத்தில் இணையவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமான தானியக்கச் சோதனை முறைகள் மூலம் ஆள்மாறாட்டம் செய்வோர், குற்றப் பின்னணி உள்ளோர் மற்றும் அதிக அபாயம் கொண்ட பயணிகள் துல்லியமாக அடையாளம் காணப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

அபாயம் உள்ளவர்களிடம் கூடுதல் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கான நோக்கங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடைமுறைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK