சிங்கப்பூர் காவல் துறையின் புதிய ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிங்கப்பூர் காவல்துறையின் புதிய ஆணையராக திரு ஹாவ் குவாங் ஹுவி பொறுப்பேற்க உள்ளார்.
இவர் திரு ஹூங் வீ டெக்கிடமிருந்து இந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.
திரு ஹூங் 10 ஆண்டுகள் ஆணையராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற இருக்கிறார்.
இவர் காவல்துறையில் 38 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். மேலும் இவர் காவல்துறையின் ஆற்றல்களை பல மடங்கு வலுப்படுத்தி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குற்றங்களை தடுப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை இவர் காவல்துறைக்கு அறிமுகப்படுத்தியதை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது.
குறிப்பாக ஆளில்லா கண்காணிப்பு இயந்திரங்களையும், காணொளிகளை ஆராயும் தொழில்நுட்பங்களையும் இவர் நடப்பிற்கு கொண்டு வந்ததையும் தெளிவுபடுத்தியது.
திரு ஹாவ் தற்போது துணை ஆணையராக இருக்கிறார். இதற்கு முன்பு குற்றவியல் விசாரணை பிரிவின் இயக்குனராகவும் கொள்கைகளை உருவாக்கும் பிரிவின் மூத்த இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.
சிங்கப்பூரின் பாதுகாப்பிற்காக ஆற்றிய சேவைகளுக்கு உள்துறை அமைச்சகமானது திரு ஹூங் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளது.