சிங்கப்பூர் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அப்டேட்…!!

சிங்கப்பூர் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அப்டேட்...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் புதிய தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தகவலை எரிசக்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய அமைப்பு செயல்படத் தொடங்கும். விண்வெளி ஆய்வுத் துறையை வளர்ப்பதோடு, சிங்கப்பூரின் நீண்டகால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இலக்குகளை அடைய இந்த அமைப்பு உதவும் என அவர் கூறினார்.

வர்த்தக மற்றும் தொழில் அமைச்சின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, விண்வெளி ஆராய்ச்சி, துணைக்கோள் உருவாக்கம், தொழில்துறை சார்ந்த வளர்ச்சி மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு வழிகாட்டும்.

மேலும், விண்வெளியின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதிசெய்ய தேவையான ஒழுங்குமுறைகளையும் இந்த அமைப்பு கண்காணிக்கும்.
விண்வெளி ஆய்வுகள் மூலம் பெறப்படும் தரவுகள் துறைமுகச் செயல்பாடுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளுக்குப் பயனளிக்கும் என டாக்டர் டான் சீ லெங் தெரிவித்தார்.

தற்போது சிங்கப்பூரில் சுமார் 70 விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் சிங்கப்பூர் இணைந்து செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK