சிங்கப்பூர் சட்டவிரோதமாக வேலை பார்த்த பெண்..!! தண்டனை என்ன..??
சிங்கப்பூரில் பிலிப்பைன்ஸ் சேர்ந்த 51 வயது மாயா கிலேரினா சான்டோஸ் டகாபான் குறைந்தது ஐந்து வீடுகளில் பகுதி நேர துப்புரவு பணி பெண்ணாக பணியாற்றி வந்தார்.
இந்தப் பணி மூலம் இவர் கிட்டத்தட்ட $296,000 வருமானம் பெற்றுள்ளார்.
இந்த வேலை வாய்ப்பானது 2010 ஆம் ஆண்டு ஜூடி கான்(47) என்பவர் மூலமாக கிடைத்தது. வேலை வாங்கிக் கொடுத்தவுடன் மாயா தனியாக ஓர் இடத்தில் தங்கிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கான் என்பவரின் வீட்டை சுத்தம் செய்த அதற்கான தனி சம்பளமாக $90 ஐ வாங்கியுள்ளார்.
மாயா சட்ட விரோதமாக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணிப்பெண் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவருக்கு 16 வார சிறை தண்டனையும் $25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையை செலுத்த தவறினால் அவருக்கு மேலும் 5 வாரம் சிறை தண்டனையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.