தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!!

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!!

தைவானின் கிழக்கு கடற்கரையில் நேற்று (27.12.25) இரவு 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் பயணம் செய்கிற அல்லது வசித்து வரும் சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தைபேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு மீண்டும் நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும், தைவானில் உள்ள சிங்கப்பூரர்கள் சமீபத்திய செய்தி புதுப்பிப்புகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்றும்,உள்ளூர் அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு ஆலோசனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த அலுவலகம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும்,தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்கள் தங்கள் பாதுகாப்பு நிலை குறித்து சிங்கப்பூரில் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அவசர தூதரக உதவி தேவைப்பட்டால் தைபேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தைபேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம்
முகவரி: 9வது தளம், எண். 85, ஜென் ஐ சாலை, பிரிவு 4, தைபே 106, தைவான்
தொலைபேசி: +886 2 2772 1940
அவசர எண்: +886 953 532 638
மின்னஞ்சல்:singtr_tpe@mfa.sg