மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!!

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி...!!!

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்று(28.12.25)காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள பகோ மாவட்டத்தின் புக்கிட் ஹபாங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 8:55 மணியளவில் பதிவானதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சைனா பிரஸ் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி செகாமட்டிலிருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், முவார் மாவட்டத்தின் பகோ புக்கிட் ஹபாங்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தின் மையம் 2.4 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.7 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவாகியுள்ளது.

புக்கிட் ஹபாங்கில் வசிப்பவர்கள் மட்டுமின்றி, செகாமட் மற்றும் மலாக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் லேசான நில அதிர்வுகளை உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்போ அல்லது சொத்துச் சேதமோ பதிவாகவில்லை.

மலேசியாவின் ஜோகூர் பகுதியில் ஆகஸ்ட் 24 முதல் இன்று(28.12.25)வரை குறைந்தது 12 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.