சிங்கப்பூர் சாலையில் கொடூர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்!

சிங்கப்பூர் சாலையில் கொடூர விபத்து..!! பரிதாபமாக உயிரிழந்த கார் ஓட்டுநர்!

சிங்கப்பூர்: இன்று(ஜூலை 27) அதிகாலை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வே சாலையில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் BMW கார் ஓட்டுநர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செலிட்டர் எக்ஸ்பிரஸ்வே (SLE) நோக்கிச் செல்லும் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் இன்று (ஜூலை 27)அதிகாலை சுமார் 4:45 மணி அளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் காரில் இருந்த மற்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த புகைப்படங்கள் ஆனது SGRV Front Man முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் BMW காரின் முன் பகுதி முற்றிலுமாக சிதைந்து ஒரு உலோகத் துண்டு போல காட்சி அளிக்கிறது; இது மோதலின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. நான்கு வழித்தடங்களிலும் சிதைவுகளும் கண்ணாடி துண்டுகளும் சிதறி கிடப்பதையும் அந்த புகைப்படத்தில் காண முடிகிறது.

மேலும் மற்றொரு புகைப்படத்தில் சாலை வலதுபுற ஓரத்தில் ஒரு கட்டுமான லாரி நிறுத்தப்பட்டு இருப்பதும், பல தொழிலாளர்கள் சாலைப் பணிகளில் ஈடுபடுவது போல அங்கும் இங்கும் நடமாடுவது தெரிகிறது.

தாழ்வான கோணத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படத்தில், மஞ்சள் சீருடை அணிந்த கருமையான நிறமுடைய ஒருவர் சாலை போடும் பொருட்களால் சூழப்பட்டு சாலையில் கிடப்பது தெரிகிறது.

விபத்தின் தாக்கத்தால் காரின் மேல் க கூரை மற்றும் முன்பகுதி முற்றிலும் சிதைந்து, எக்ஸ்பிரஸ்வேயின் பல பாதைகளில் பாகங்கள் சிதறி கிடந்தன. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காயமடைந்த மூன்று நபர்களையும் சிகிச்சைக்காக டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF)தெரிவித்துள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK