லிட்டில் இந்தியா MRT-ல் புதிய மாற்றம்!! வழி தெரியாமல் இனி யாரும் தவிக்க வேண்டாம்..!!

லிட்டில் இந்தியா MRT-ல் புதிய மாற்றம்!! வழி தெரியாமல் இனி யாரும் தவிக்க வேண்டாம்..!!

சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா MRT நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு தேவையான வெளியேறும் வழிகளை எளிதாக கண்டறியும் வகையில், புத்தம் புதிய வண்ணமயமான வழிகாட்டி பலகைகள் மற்றும் வரைபடங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தஞ்சோங் பாகர் GRC-யின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய வளர்ச்சி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் இந்த புதிய திட்டம் குறித்து ஜூலை 25ஆம் தேதி அன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், இது SBS Transit மற்றும் சிங்கப்பூர் டி மென்ஷியா சொசைட்டி ஆகியவற்றின் கூட்டு முயற்சியோடு, உங்கள் வழியைக் கண்டறியுங்கள் (Find Your Way) என்ற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைப்பின் முக்கிய அம்சங்கள்:
👉வழக்கமான வழிகாட்டிப் பலகைகளைப் போல் இல்லாமல், இந்த நிலையத்தில் உள்ள ஒவ்வொரு வெளியேறும் வழியும் (Exits A, B, C, etc) தனித்துவமான மற்றும் பிரகாசமான வண்ணங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

👉 மறதி நோய் உள்ளவர்கள் நீண்ட எழுத்துக்களைப் படித்துப் புரிந்து கொள்வதை விட வண்ணங்கள் மற்றும் எளிய வடிவங்களை எளிதில் புரிந்து கொள்வார்கள் என்ற அறிவியல் அடிப்படையிள் நோக்கத்தை கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

👉முதியவர்களின் பார்வைத் திறனைக் கருத்தில் கொண்டு, பெரிய அளவிலான எழுத்துக்களும் எளிய காட்சிப் படங்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

முதியவர்கள் மற்றும் மறதி நோயாளிகள் பிறரின் உதவி இன்றி, தங்களுக்கான பாதையை தாங்களே எளிதாக உணர்ந்து பயணிக்க வேண்டும் என்பதை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பெரிய மற்றும் பரபரப்பான MRT நிலையங்களில் வழி தெரியாமல் ஏற்படும் பதற்றத்தையும் குழப்பத்தையும் இந்த எளிய வண்ணப் பலகைகள் குறைக்கும் என நம்பப்படுகிறது.

 

பரபரப்பான MRT நிலையத்தில், மறதி நோயாளிகளுக்கு திசைகளைக் கண்டறிவதில் சிரமம் ஏற்படும் எனவும், இந்த புதிய திட்டத்தின் மூலம் அவர்கள் மேலும் தன்னம்பிக்கையுடனும் நிம்மதியுடனும் MRT ரயிலில் பயணம் செய்ய விரும்புவார்கள் எனவும் SBS டிரான்சிட் தனது முகநூல் பக்கத்தில் நேற்று (ஜூலை 26) பதிவிட்டுள்ளது.

சிங்கப்பூரை ஒரு ‘மறதி நோய் உகந்த நாடாக'(Dementia – Friendly Singapore) மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.