5 காசு நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதா..?? இல்லையா..??
சிங்கப்பூர் நாணய ஆணையமானது ஐந்து காசு நாணயங்களை புழக்கத்தில் இருந்து மீட்டுக் கொள்ளும் திட்டம் இடவில்லை என துணை பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
பொதுமக்களிடையே இவற்றுக்கான தேவையானது அதிகமாக இருப்பதையும் சுட்டி காட்டியுள்ளார்.
சிங்கப்பூர் நாணயம் ஆணையத்தின் தலைவர் ஆன திரு கான் அல்ஜுனிட் குழு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபௌவுலி நேற்று (பிப்ரவரி 24ஆம் தேதி) நாடாளுமன்றத்தில் அனுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
திரு ஃபட்லி ஒவ்வொரு ஐந்து காசையும் தயாரிப்பதற்கு ஆகும் செலவு குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில் நாணய மதிப்பை விட அதை தயாரிக்கும் செலவு அதிகமாக உள்ளது என்றால் ஐந்து காசு நாணயங்களை திரும்ப மீட்டுக் கொள்ளுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்
இந்தக் கேள்விகளுக்கு திரு கான் எழுத்துப்பூர்வ வடிவில் பதில் அளித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூர் நாணயச் சாலையில் புதிய ஐந்து காசுகள் தயாரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஐந்து காசுகளை இனிமேல் தயாரிக்கும் எண்ணம் சிங்கப்பூர் நாணய ஆணையத்திற்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஐந்து காசு நாணயங்களை தயாரிக்க ஆகும் செலவு அதை நாணய மதிப்பை விட குறைவாக உள்ளது எனவும் திரு கான் தெளிவாக விளக்கியுள்ளார்.
விரைவு உணவகங்கள் பேர் அங்காடிகள் போன்றவை சில பொருள்களுக்கான விலைகளை நிர்ணயிக்கும் போது ஐந்து காசை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது ஆனால் கடைகள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பைகளுக்கு ஐந்து அல்லது பத்து காசு வசூலிக்கின்றன என்பதை கான் குறிப்பிட்டு இருந்தார்.
துணை பிரதமர் கூறியதாவது: ஆணையம் பயன்பாட்டு போக்கையும் 5 காசு நாணயத்திற்கான தேவையையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நீண்ட கால அடிப்படையில் இதன் தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
ஐந்து காசு நாணயங்களை திரும்ப பெற்றுக் கொண்டால் சில்லறை விற்பனையாளர்கள் பொருள்களின் விலையை 10 காசுக்கு மாற்றுவர். அது வாடிக்கையாளர்களை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.