பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை...!!
சிங்கப்பூர்: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) திட்டத்துடன் தொடர்புடைய பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, ஜோகூர் பாரு-சிங்கப்பூர் தரைப்பாலப் பாதை நாளை (22.09.25) முதல் அக்டோபர் 3 வரை 12 நாட்களுக்கு கட்டம் கட்டமாக மூடப்படும்.
மலேசிய விரைவுப் போக்குவரத்துக் கழகம், செப்டம்பர் 19 ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை அறிவித்தது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது,0.75 கிலோமீட்டர் தூரத்தில் இரு திசைகளிலும் படிப்படியாக பாதை மூடல்கள் மேற்கொள்ளப்படும். இதற்கான காரணங்களாக கான்கிரீட் விபத்து தடுப்பு பழுதுபார்ப்பு, தெருவிளக்கு ஸ்டிக்கர் பொருத்துதல், பிரதிபலிப்பு ஸ்டிக்கர் பொருத்துதல் மற்றும் RTS இணைப்புத் திட்ட பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாதை மூடப்படும் நேரங்கள்:
💠 உட்லேண்ட்ஸ் நோக்கி செல்லும் பாதைகள்: இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை
💠 ஜோகூர் பாரு நோக்கி செல்லும் பாதைகள்: இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை
இந்த இடைக்கால மூடுதலால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.