தவறான அறுவை சிகிச்சை..!! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!
உத்திரபிரதேசம்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் நோயாளிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று 56 வயதுடைய பெண் வயிற்று வலி என்று மருத்துவரை காணச் சென்றுள்ளார்.
பெண்ணுக்கு வலது சிறுநீரகத்தில் கோளாறு இருப்பதாக கூறிய மருத்துவர் அறுவை சிகிச்சை மூலம் அந்த சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதே ஆண்டு மே 6ஆம் தேதி அறுவை சிகிச்சைக்கு பின் சிறுநீரக சுத்திகரிப்புக்கு செல்லும்படி பெண்ணிடம் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வயிற்றில் உள்ள பிரச்சனை அந்த பெண்ணுக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.
இதனால் மறுபடியும் மருத்துவரிடம் பரிசோதனைக்கு பெண் சென்று உள்ளார். தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் பெண்ணின் வலது சிறுநீரகத்தில் எந்த கோளாறும் இல்லை எனவும், அவரது இடது சிறுநீரகம் தான் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
உடல்நலக் குறைவால் கஷ்டப்பட்டு பெண் கிட்டத்தட்ட 2 வருடம் கழித்து உயிரிழந்துள்ளார். பெண்ணுக்கு நடைபெற்ற தவறான அறுவை சிகிச்சைக்கு அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தம்மீது சுமத்தப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேச மருத்துவ சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
மருத்துவரின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் தவறான சிறுநீரகம் நீக்கப்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.