சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங்கில் ஒரு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இந்த மோதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்து, ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இன்று (15.08.2025) பிற்பகல் 2:20 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் கட்டிடத்திற்கு அருகிலுள்ள 1 ஜெலேபு சாலையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து ஏற்பட்டது.
54 வயதான ஆண் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், 54 வயதான பெண் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Singpore roads accident.com என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், ஒரு SMRT பேருந்து சம்பந்தப்பட்டிருப்பதையும், பேருந்தின் முன் சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் தரையில் சிதறிக் கிடப்பதையும் காணலாம்.
அதில் பேருந்தின் கண்ணாடி உடைந்திருப்பதை காண முடிகிறது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.