சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து...!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேசா டிராவல்ஸின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது.
உள்ளூரில் இயங்கி வரும் பயண நிறுவனம் பயண முகமைகள் சட்டத்தை மீறியதற்காக நேற்று (28ஆம் தேதி) சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வணிக உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
காரணம்: தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள் மற்றும் வருடாந்திர வணிக விவரக் குறிப்பை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும், விதிமுறைகளை மீறியதற்காக உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலாக விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த தவறியதாலும், வணிக உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
இந்த ஆண்டு(2025) நவம்பர் 6ஆம் தேதி உரிமங்கள் காலாவதி ஆகும் முன்பு ஆபரேட்டர்கள் அபராதத்தை செலுத்த வேண்டும்.
பிறகு, அவர்கள் மீண்டும் செயல்பாடுகளை தொடங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் ஆபரேட்டர்கள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஆனால், புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து பயன ஆர்டர்களை ஏற்க முடியாது.
விதிமுறைகளின் கீழ் வணிகங்கள் நிதியாண்டு முடிவடைந்த 6 மாதங்களுக்குள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் வருடாந்திர வணிக மேலோட்ட அறிக்கைகளை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இல்லையெனில் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் என சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது.