சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இன்று முதல் வரும் மாற்றங்கள்! இதனால் யாருக்கு என்னென்ன பயன் என்று இந்த பதிவில் பார்க்கலாம்!!
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இன்று முதல் வரும் மாற்றங்கள்!! இதனால் யாருக்கு என்னென்ன பயன் என்று இந்த பதிவில் பார்க்கலாம்!!
சிங்கப்பூர் Work Permit-இல் இன்று ஜூலை 1 2025 முதல் பல புதிய மாற்றங்களை மனிதவள அமைச்சு(MOM) அறிவித்துள்ளது, அதில் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்யும் கால அளவு மற்றும் வயதுவரம்பு போன்றவற்றில் பல முக்கிய மாற்றங்கள் வந்துள்ளது.
அது என்னென்ன என்றும் அதனால் பயன்பெறுபவர்கள் யார் யார்??, இதை கம்பெனிகள் சரியான முறையில் கையாளுமா?? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1.வெளிநாட்டு ஊழியர்களுக்கான வேலை செய்யும் காலவரம்பு இனி இல்லை. இன்று ஜூலை 1, 2025க்கு முன்பு நீங்கள் சிங்கப்பூரில் 16 முதல் 26 ஆண்டுகள்தான் இருக்க முடியும்.ஆனால் இனி அந்த காலவரம்பு கிடையாது.
இனிமேல் நீங்கள் சிங்கப்பூரில் 16 ஆண்டுகளுக்கு மேலும் வேலை செய்ய முடியும். ஆனால் யாரும் வெளிநாட்டில் இருந்து வந்து இத்தனை ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.( ஒரு சிலரை தவிர)
2.வெளிநாட்டில் வேலை செய்ய வயது வரம்பு 60 இலிருந்து 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வயது வரம்பை எந்த நிறுவனமும் எடுத்துக் கொள்வது இல்லை. ஏனென்றால் வயது குறைவானவர்களையே நிறுவனங்கள் விரும்புகின்றன, வயது அதிகமானவர்களை வைத்துக் கொள்ள நிறுவனங்கள் விரும்புவதில்லை.
ஏனென்றால் அவர்கள் வேலை செய்யும் திறன் குறைவாக இருக்கும் என நிறுவனங்கள் நினைக்கின்றது. அது மட்டும் இல்லாமல் அவர்கள் உடல் ரீதியாகவும் சோர்ந்து இருப்பார்கள். அதிக நேரம் தொடர்ந்து சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது என்றும் நிறுவனங்கள் நினைக்கின்றது. அதனால் 60 வயது வரை அவர்களை நிறுவனங்கள் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அவர்களுக்கு பதிலாக வயது குறைந்த புதிய ஊழியர்களை எடுக்கவே நிறுவனங்கள் விரும்புகிறது.
3.புதிதாக சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு 61 ஆக நீட்டிப்பு!!
சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வருபவர்களின் வயது வரம்பு 61 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
பலர் இனிமேல் அறுபது வயதிற்கு மேலும் சிங்கப்பூருக்குள் வேலைக்கு வரலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் ஒரு சில கம்பெனி நிர்ணயிக்கும் வயதுவரம்பு அதிகபட்சம் (40 to 47) இதற்கு அதிகமாக இருந்தாலே உங்களால் சிங்கப்பூர் வருவது கடினம்.
ஏனென்றால் வயது அதிகமானவர்களை எந்த நிறுவனமும் எடுக்க விரும்புவதில்லை.
அதற்கும் வயதானவர்கள் மிகவும் மெதுவாக வேலை செய்வார்கள் என்பதும் அவர்கள் உடல் நலப் பிரச்சனையால் அடிக்கடி விடுமுறை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதே காரணம்.
வெளிநாட்டு ஊழியர்களுக்காகவும் சிங்கப்பூரில் உள்ள நிறுவங்கள் அதன் வளர்ச்சிக்காகவும் மனிதவள அமைப்பு பல நல திட்டங்களை கொண்டு வருகிறது. ஆனால் ஒரு சில நிறுவனங்களைத் தவிர பல நிறுவனங்கள் அதை சரியான முறையில் கையாளுவதும் இல்லை என்ற எண்ணம் வெளிநாட்டு ஊழியர்களுக்கிடையே உள்ளது.