சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!!

சிங்கப்பூரில் லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!!

சிங்கப்பூரில் உள்ள CTE விரைவுச் சாலையில் சென்ற ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி 4.5 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான லாரியை ஓட்டிச் சென்று 1.4 மில்லியன் வெள்ளி சேதத்தை ஏற்படுத்திய 55 வயது லாரி ஓட்டுநர் மீது இன்று(ஜூலை 30) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.

அவர் ஓட்டிச் சென்ற லாரி உயரவரம்பு தடுப்புச் சுவரின் மீது மோதியதால் கடும் சேதம் ஏற்பட்டது என்று புலனாய்வு கூறுகிறது.

இந்த ஓட்டுநர் இதேபோன்று ஏற்கனவே உயர வரம்பை மீறி வாகனத்தை ஓட்டி சேதம் ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

 

சுரங்கப் பாதையில் இருந்த மின்சார சாதனங்கள் சேதமடைந்தன இதனால் 1.4 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

4.5 மீட்டர் உயரத்திற்கும் அதிகமான கனரக வாகனங்களை ஓட்டும் போது காவல்துறை அல்லது துணை காவல் துறையில் பாதுகாப்பு அவசியமாகும்.

4.5 மீட்டர் உயர வரம்பை மீறி கனரக வாகனம் ஓட்டிய குற்றத்துக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை கட்டாயச் சிறைத்தண்டனையும் அதிகபட்சம் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தைப் புரிந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை கட்டாயச் சிறைத்தண்டனையும் கூடியபட்சம் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

கனரக வாகனத்தை ஓட்டி ஏதாவது கட்டடம் மீது மோதி சேதம் ஏற்படுத்தினால் அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதம், ஈராண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan