சிங்கப்பூரில் பள்ளி மாணவர் செய்த அதிர்ச்சி செயல்..! வெளியான பரபரப்பு வீடியோ.!!

சிங்கப்பூரில் உள்ள Hua Yi Secondary School பள்ளி மாணவர் ஒருவர், பள்ளி வளாகத்தில் உள்ள சுவரைத் தாண்டி நடைபாதையின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைப் பகுதிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியான காணொளியில், பள்ளி சீருடை அணிந்திருந்த மாணவர் ஒருவர் சுவரைத் தாண்டி மேற்கூரையின் மீது நிற்பது காணப்படுகிறது.
அப்போது அருகில் இருந்த சிலர் மாணவரை குதிக்குமாறு தொடர்ந்து கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாணவர் மெதுவாக மேற்கூரையின் விளிம்பை நோக்கிச் சென்று, அங்கிருந்து கீழே உள்ள புல்வெளிப் பகுதியில் குதித்துள்ளார்.
மாணவர் தரையில் விழுந்ததும், அருகில் இருந்த ஒருவர் உடனடியாக அவரை நோக்கிச் சென்றதாகக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து Hua Yi Secondary School பள்ளி நிர்வாகத்திடம் விசாரிக்கப்பட்டது. சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் அறிந்திருப்பதாகவும், மாணவரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பள்ளி அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட மாணவர் தற்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக பள்ளி தெரிவித்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பெற்றோர்களைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, காணொளியில் இடம்பெறும் மூடப்பட்ட நடைபாதை, அப்பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகளுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தது என்றும், தற்போது அது அகற்றப்பட்டுவிட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக பள்ளி உறுதி செய்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
