சிங்கப்பூரில் நடந்த கொள்ளை சம்பவம்..!! கைதான சீன நபர்..!!

சிங்கப்பூரில் நடந்த கொள்ளை சம்பவம்..!! கைதான சீன நபர்..!!

சிங்கப்பூரில் 07/12/2025 மற்றும் 08/12/2025 அன்று மூன்று இடங்களான குவாங் டோங் சாலை, லாய் யுயென் லேன், சென்டோசா பகுதியில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

இதில் ஒரு இடத்தில் வீட்டு உரிமையாளர் யாரும் இல்லாத நேரத்தில் 40 வயதைச் சேர்ந்த சீனா நபர் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த நகைகளையும், S$1,000 க்கும் அதிகமான பணத்தையும், EZ- லிங்க் அட்டைகள் மற்றும் ஒரு தொப்பியுடன் விக் மிக அனைத்தையும் திருடியுள்ளார்.

இந்த திருட்டு சம்பவம் தெரிந்த காவல்துறையினர் உடனேயே அவரை கைது செய்தனர். விசாரணையின் போது மேற்கூறிய அனைத்து பொருட்களையும் திருடியுள்ளதாக தெரியவந்தது.

உடனே அந்த பொருட்கள் அனைத்தையும் காவல்துறையினர் மீட்டனர். மேலும் கைது செய்த சீன நபரை இன்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK