சிகையலங்காரத் துறை மீது அதிகரிக்கும் புகார்கள்..!!!
சிகை அலங்கார துறையின் மீது அதிகமாக புகார்கள் வந்துள்ளது என CASE இன் தலைவர் மெல்வின் யோங் கூறினார்.
தரமற்ற சேவை, கூடுதல் கட்டணம், சேவை பற்றிய தவறான தகவல்கள் முதலியன பற்றிய பெரும்பாலும் புகார் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டின் முற்பாதியில் அதிக புகார்களை பெற்ற முதல் 10 துறைகளில் சிகை அலங்காரத்துறை 9 ஆவது நிலையில் உள்ளதாக CASE எனும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் முற்பாதியில் பெறப்பட்ட 170 புகார்களை காட்டிலும் இந்த ஆண்டின் முற்பாதியில் சிகை அலங்கார துறை பற்றி 167 புகார்கள் மட்டுமே கிடைத்திருப்பதாக CASE இன் தலைவர் தெரிவித்துள்ளார்.
நான் இதுவரை திடீரென்று மூடப்பட்ட சிகை அலங்கார கடைகளில் முன்கூட்டியே கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு சுமார் 5,600 வெள்ளி இழப்பு ஏற்பட்டது.
ஆனால் சென்ற ஆண்டு அந்த தொகை சுமார் 21,800 வெள்ளியாக இருந்தது. இந்த ஆண்டு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே கட்டணத் தொகை வந்துள்ளது என CASE யின் தலைவர் கூறியுள்ளார்.