சிங்கப்பூர்:மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 360 கிலோ புதிய காய்கறிகளை சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) பறிமுதல் செய்துள்ளது.
ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட கூட்டு சோதனையில், குடிவரவு அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான சரக்குகளை கண்டுபிடித்து, SFA-க்கு ஒப்படைத்தனர்.