சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெயரில் மோசடி..!! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை..!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) தனது நிறுவனத்தின் பெயரில் பரப்பப்படும் ‘கிரிஸ்ஃபிளையர் அனிவர்சரி டிரா'(KrisFlyer Anniversary Draw) என்ற போலி மின்னஞ்சல்கள் குறித்துப் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அடிக்கடி பயணம் செய்வோர் திட்டமான க்ரிஸ்ஃப்ளையர் ஆண்டுவிழா குலுக்கல் முறையில் பரிசு விழுந்திருப்பதாக கூறி போலி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.
இந்த மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளைக் (LINK) கிளிக் செய்யும் போது, அவை போலியான வலைதளங்களுக்கு அழைத்துச் சென்று, பயனர் பெயர் கடவுச்சொல் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை திருடுகின்றன.
இத்தகைய மின்னஞ்சல்களைப் பெற்றால் அவற்றில் உள்ள எந்த ஒரு லிங்குகளையும் கிளிக் செய்யவோ, அல்லது அட்டாச்மென்ட்டுகளைத் திறக்கவோ வேண்டாம் எனவும் அவற்றை உடனடியாக நீக்கிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளரிடம் ஒருபோதும் கடவுச்சொற்கள், ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP), கிரெடிட் கார்டு பின் எண்கள் வலது பரிசுகளைப் பெறுவதற்கான கட்டணங்களை ஒருபோதும் கேட்காது என திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஏற்கனவே இந்த மின்னஞ்சல்களுக்கு பதிலளித்த அல்லது விபரங்களைப் பகிர்ந்த நபர்கள் உடனடியாக தங்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும் கடவுச்சொற்களை மாற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் மற்றும் சந்தேகம் இருந்தால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உண்மை தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.