சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!! பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்...!!!

துவாஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் (ஜூன் 12) சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
லாரியின் சரக்குப் பெட்டி வைக்கப்படும் இடத்தின் மூலையில் மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் (ICAA) ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அவர் மலேசியாவிற்கு லாரி மூலம் சட்டவிரோதமாக நுழைய முயன்றது தெரியவந்துள்ளது.
அவரையும், லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரையும் கைது செய்ததாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
அவர்களிடம் தற்போது மேல் விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
1959 ஆம் ஆண்டு குடிவரவுச் சட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டிற்குள் நுழைவது அல்லது வெளியேறுவது சட்டப்படி குற்றமாகும்.
பாஸ்போர்ட் இல்லாமல் சட்டவிரோதமாக சிங்கப்பூரை விட்டு வெளியேறும் நபர்களுக்கு S$2,000 வரை அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 6,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
