இந்திய பெருங்கடலில் அதிகம் அறியப்படாத பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக ஆழ் கடலுக்கு பயணம் செய்ய உள்ளனர்.
எந்தெந்த நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள்?
சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பசிபிக் தீவு நாடான பிஜி ஆகிய நாடுகளை சேர்ந்த 20 விஞ்ஞானிகள் சேர்ந்த ஓசன் எக்ஸ்ப்ளோரர் இன்று(07/10/2025) புறப்பட்டது.
எத்தனை நாள் பயணம்?
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ஒரு அமெரிக்க லாப நோக்கற்ற அமைப்புகள் இணைந்து 24 நாள் பயணம் தொடங்கப்பட்டது.
எவ்வளவு பரப்பளவு?
17,000 சதுர கிலோமீட்டர அதிகமான பரப்பளவை கொண்டுள்ளது.
கடல் பகுதியில் பல்லுயிர் தரவு தளத்தை நிறுவுவதற்கான நோக்கத்திற்காக இந்த ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.
பொது மக்களுக்கு என்ன நன்மை?
அறிவியல் ஆராய்ச்சிப் பணியின் பயண முடிவுகளையும் ஆராய்ச்சியின் போது சேகரித்த அதன் மாதிரிகளையும் லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.