ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..??

ஆண்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா..?? சிங்கப்பூர் மருத்துவர் கூறியது என்ன..??

ஆண்கள் உடல் நலன் கருதி உடல் பருமனை குறைக்க வேண்டும் என சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர் இரைப்பை கூடல் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவிசங்கர் அசோக்குமார் பரிந்துரைத்துள்ளார்.

உடல் பருமனை சரி செய்வதற்காக தற்போது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பழக்கவழக்கங்களை பற்றியும் அவர் கூறியுள்ளார்.

உடற்பருமனை சரி செய்வதற்கு இன்றைய அவசர உலகில் பலரும் யூடியூப் சேனல் மூலமாக மருத்துவர்களாக மாறி வருகிறார்கள்.

புத்தாண்டு பிறந்த உடனே ஏன் இந்த ஆண்டை எப்படியும் உடல் எடையை குறைத்து ஆக வண்டும் என உறுதிமொழி எடுத்த உடற்பயிற்சி கூடத்தில் உறுப்பினர் அட்டையை வாங்கி, அதன் பிறகு அங்கு செல்லாமலே பலரும் இருந்து வருகிறார்கள்.

இன்னும் சிலர் இணையத்தை பார்த்து வேறு நாடுகளில் விற்கப்படுகின்ற மூலிகை தேநீரை வாங்கி குடித்தால் போதும் உடனே உடல் எடை குறைந்து விடும் என நம்பி ஏமாறுகின்றனர்.

சிறிது தூரம் சைக்கிள் ஓட்டினால் உடல் எடை குறைப்பதற்கான கடமை முடிந்தது என நினைத்து உடனடியாக கலைக்க சென்று ஒரு பெரிய மில்க் ஷேக்கையோ இனிப்பு நிறைந்த ஐஸ் டீயை குடித்து திருப்தி அடைந்து கொள்கிறார்கள் என டாக்டர் ரவிசங்கர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக உடல் பருமனாக உள்ளவர்களை எண்ணிக்கையானது தொடர்ந்த அதிகரித்துக் கொண்டே போகிறது என கவலையுடன் தெரிவித்துள்ளார்.
2019 – 2020 >10.5%
2021 – 2022 >11.6%
2023 – 2024>12.7%

எனவே பின்வரும் ஆலோசனைகளின் படி ஆண்கள் அவர்களது உடல் பருமனை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டியது அவசியம் என டாக்டர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கு உடல் எடையைக் குறைக்க, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை (புரதம், நார்ச்சத்து) உணவில் சேர்ப்பது, தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, சர்க்கரை மற்றும் மது அருந்துவதைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை மிகவும் அவசியம்.

ஆண்களுக்கான சில பயனுள்ள ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உணவுக் கட்டுப்பாடு:புரதச்சத்து: உங்கள் உணவில் மீன், முட்டை, பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகப்படுத்துங்கள். இது தசைகளை வலுவாக்கவும், நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்க உதவும்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்: நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளான (ப்ரோக்கோலி, காலிஃபிளவர், சுரைக்காய்) மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள்.

பகுதி கட்டுப்பாடு: ஒரே நேரத்தில் அதிகமாக உண்பதைத் தவிர்த்து, சிறிய தட்டுகளில் சாப்பிடப் பழகுங்கள்.

மது அருந்துவதைக் குறைத்தல்: மதுவில் கலோரிகள் அதிகம் என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைக்கும் ஆண்கள் மது அருந்துவதைக் குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சி:ஆரோக்கிய நடைப்பயிற்சி: தினமும் குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

வலிமை பயிற்சி (Strength Training): உடல் எடையைக் குறைப்பதோடு, தசைகளை வலுப்படுத்த எடை தூக்கும் பயிற்சிகள் (Weight lifting) அல்லது வலிமை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

முழுமையான பயிற்சி: வாரம் முழுவதும் குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் வரை மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்:போதுமான தூக்கம்: நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த உறக்கம் அவசியம். தூக்கமின்மை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

தண்ணீர் குடியுங்கள்: தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலின் மெட்டபாலிசம் சீராகும் மற்றும் தேவையற்ற பசி கட்டுப்படுத்தப்படும்.

பட்டினி கிடப்பதைத் தவிர்க்கவும்: ‘க்ராஷ் டயட்’ எனப்படும் பட்டினி கிடக்கும் முறையைக் கையாள்வது தற்காலிகமாக எடையைக் குறைத்தாலும், பின்னாளில் உடல் எடையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK