சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?

உயிரை மாய்த்துக் கொண்டோரின் எண்ணிக்கையை கணிப்பது, பொதுமக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை தரக்கூடும் என்று மனநல பராமரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ள சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் கலந்த 2023 ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் இறுதி அதிகாரப்பூர்வ எண்ணிக்கை முதலில் கணிக்கப்பட்ட எண்ணிக்கை விட அதிகமாக பதிவாகி இருந்தது.

குடி நுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் திங்கட்கிழமை ஜூலை 28 அறிக்கை வெளியிட்டது.

2023 ஆம் ஆண்டில் உயிரை மாய்த்துக் கொண்டோரின் எண்ணிக்கை முதலில் 322 என கணிக்கப்பட்டிருந்தது.

இறுதி எண்ணிக்கை 34.8 விழுக்காடு கூடி 434 ஆக பதிவானது.

முதலில் கணிக்கப்பட்ட எண்ணிக்கையை ஆணையம் சென்ற ஆண்டு வெளியிட்டது இறுதி எண்ணிக்கை இம்மாதம் வெளியிடப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்ட எண்ணிக்கை 2000 ஆண்டுக்குப் பிறகு ஆகக் குறைவாக இருந்தது.

பிறகு இறுதி எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது தனக்கு அதிர்ச்சி அளித்தது என்று இளையர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிலிஸ்டே இயக்கத்தை தொடங்கிய ஓரில் ஒருவரான இலெயின் லெக் கூறினார்.

அதேபோல் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் மனநல ஆர்வலருமான அந்தியா ஓங், கணிக்கப்பட்ட எண்ணிக்கையை முதலில் வெளியிடுவதற்கு பதிலாக ஏன் காத்திருந்து இறுதி எண்ணிக்கை வெளியிடக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

கணிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் இறுதி எண்ணிக்கைக்கும் இடையே 35 விழுக்காடு வித்தியாசம் பதிவானால் கணிக்கப்பட்ட எண்ணிக்கையின் நம்பகத்தன்மையை இழந்து விடுவது போல் ஆகிறது என கூறினார் அவர்.

மாற்றம் ஒன்றே மாறாதது எனவே தயவு செய்து உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் இந்த வாழ்க்கை நமக்கு கிடைத்த வரம் என்று நினைத்து, உங்களுக்கு இருக்கும் கஷ்டத்திற்கு எதிராக போராடி மீண்டு வந்தால் பிரகாசமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கும் தயவு செய்து யாரும் தற்கொலை முயற்சி செய்ய வேண்டாம் இது நமது எஸ் ஜி தமிழனின் வேண்டுகோள்!

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan