வெளிநாட்டு வேலைக்கு செல்ல இந்த மாதிரி போலி ஏஜெண்டுகளிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துறாதீங்க..!!
வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கப்படும் என்று விளம்பரம் மூலம் சமூக வலைதளத்தில் கூறி வந்தவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நாவல் பூண்டியில் வசிக்கும் வாணிதாசன் (30) ஆவார்.
இவர் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆட்கள் அனுப்பி வைக்க ஏஜெண்டாக விளம்பர மூலமாக மற்றவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி பலரும் தொடர்பு கொண்டு வெளிநாட்டு வேலைக்கு விசாரித்து வந்தனர்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை என்ற ஊரைச் சேர்ந்த விக்னேஷ்(28) என்பவர் ரூ.5 லட்சமும், பட்டுக்கோட்டை அடுத்ததாக உள்ள தம்பிக்கோட்டையைச் சேர்ந்த தினேஷ் (25) ரூ.4 லட்சமும் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சபரீசன் (25) ரூ.4.15 லட்சம் என மொத்தமாக 40 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
ஏஜென்டான வாணிதாசன் என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தரவில்லை பலமுறை பணம் கட்டியவர்கள் கேட்டும் வாணிதாசன் காலம் கடத்தி வந்துள்ளார்.
தாங்கள் கொடுத்த பணத்தை தருமாறு கலைமணி கேட்டும் வாணிதாசனிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
இதன் காரணமாக மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் கலைமணி என்பவர் கடந்த மாதம் (அக்டோபர்) புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், எஸ் ஐ சங்கவை, ஏட்டு பிரபு ஆகியோர் நவம்பர் 1, 2025 அன்று வழக்குப்பதிவு செய்து ஏஜென்ட் வாணிதாசனை கைது செய்தனர்.
பிறகு மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஏஜென்ட் வாணிதாசனை ஆஜர் படுத்தி வழக்கு விசாரணை முடிவில் ரூ.40 லட்சம் மோசடி நிரூபணம் ஆனதால் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.