எட்டு வார மௌனம்…!!ப்ரீதம் சிங்கின் நடவடிக்கை குறித்து நீதிபதி கடும் கேள்வி..!!

எட்டு வார மௌனம்...!!ப்ரீதம் சிங்கின் நடவடிக்கை குறித்து நீதிபதி கடும் கேள்வி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ரைசா கான், 2021 இல் நாடாளுமன்றத்தில் பாலியல் வன்கொடுமை குறித்த தவறான அறிக்கை அளித்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில், கட்சித் தலைவர் ப்ரீதம் சிங் மீது நீதிபதி கடுமையான கேள்விகள் எழுப்பினார். ஆகஸ்ட் 8 முதல் அக்டோபர் 3, 2021 வரை ரைசா கான் பல முறை விளக்கமளித்தபோதும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காதது “அசாதாரணமானது” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

நீதிபதி, “அந்த முக்கியமான எட்டு வாரங்களில் ப்ரீதம் சிங் மௌனமாக இருந்தது குழப்பம் அளிக்கிறது” என்றும், ரைசாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது ஒருபக்கம் என்றாலும், “முழுமையான நடவடிக்கை இல்லாததை நியாயப்படுத்த முடியாது” என்றும் கூறினார்.

பாதுகாப்பு தரப்பில் வழக்கறிஞர் ஆண்ட்ரே ஜுமாபோய், “அந்த காலத்தில் ப்ரீதம் சிங் கடுமையாக பிஸியாக இருந்தார். மேலும் ரைசா கான் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்” என விளக்கினார். அவர், “ப்ரீதம் சிங் விஷயத்தை புறக்கணிக்கவில்லை.சூழ்நிலை நுணுக்கமானது” என வாதிட்டார்.

ஆனால் நீதிபதி, “உங்கள் விளக்கத்துடன் நான் உடன்படவில்லை” என்று இருமுறை தெரிவித்தார். மேலும், ரைசா கான் தனது பெற்றோருடன் குற்றச்சாட்டை விவாதித்தாரா என்பதைப் பற்றி ப்ரீதம் சிங் ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.

அத்துடன், ப்ரீதம் சிங் ரைசாவிடம் “நான் உன்னை விமர்சிக்க மாட்டேன்” என்று கூறியதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் அதனை “பொறுப்பை ஏற்க வேண்டும்” என்ற அர்த்தத்தில் கூறினேன் என விளக்கினார். இதற்கு நீதிபதி, “இது தெளிவற்ற நிலைப்பாடு என்றும் அந்த கூற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது” எனக் கூறினார்.

நீதிமன்றத்தில் நடக்கும் இந்த விசாரணை, தொழிலாளர் கட்சியின் உள்துறை செயல்பாடுகளையும் அதன் தலைமைப் பொறுப்பையும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK