சவாரி சேவைகளில் தொடரும் கட்டண உயர்வு..!!

சவாரி சேவைகளில் தொடரும் கட்டண உயர்வு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் Grab மற்றும் ComfortDelGro நிறுவனங்களைத் தொடர்ந்து, Gojek மற்றும் Ryde நிறுவனங்களும் தங்களது தளக் கட்டணங்களை இந்த மாதம் உயர்த்தியுள்ளன. Gojek தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை S$0.90 இலிருந்து S$1.50 ஆகவும், பின்னர் S$1.10 இலிருந்து S$1.70 ஆகவும் உயர்த்தியுள்ளது.

Ryde நிறுவனம் வரும் 17ஆம் தேதி முதல், S$18க்கு குறைவான பயணங்களுக்கு தளக் கட்டணத்தை S$1.14 இலிருந்து S$1.25 ஆகவும், S$18க்கு மேற்பட்ட பயணங்களுக்கு S$1.36 இலிருந்து S$1.47 ஆகவும் உயர்த்துகிறது.

கடந்த மாதம் Grab தனது கட்டணத்தை S$0.90 இலிருந்து S$1.20 ஆகவும், ComfortDelGro S$1.00 இலிருந்து S$1.30 ஆகவும் உயர்த்தியிருந்தது. இந்த மாற்றங்கள் Platform Workers Act கீழ் EPF பங்களிப்பு விகிதங்களில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

1995ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த தளப் பணியாளர்கள் EPFக்கு கூடுதல் பங்களிப்பு செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், நிறுவனங்களும் அதற்கான பங்களிப்புகளைச் செய்ய வேண்டும். 1995க்கு முன் பிறந்தவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்.இதுவரை TADA நிறுவனம் மட்டும் தனது தளக் கட்டணங்களில் மாற்றம் அறிவிக்கவில்லை.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK