சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூரில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை (FIFA) மையமாகக் கொண்டு தற்போது இணைய மோசடிகள் தீவிரமடைந்து வருகிறது என்று சிங்கப்பூர் காவல்துறையினர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

எந்தெந்த வகையில் மோசடி நடைபெறுகிறது?
போலியான இணையதளங்களை உருவாக்கி Exclusive டிக்கெட்டுகள் தருவதாக அதாவது போலி நுழைவு சீட்டுகள் கூறி பணம் பெறப்பட்டு பின்னர் அந்த பக்கங்கள் முடக்கப்படுகின்றன.

போலியான கட்டண பக்கங்கள் மூலமாக பயணர்களின் கடவுச்சொற்கள் (OTP) மற்றும் அட்டை விவரங்கள் திருடப்படுகின்றன.

போட்டிகளை இலவசமாக பார்ப்பதற்கான இணைப்புகள் (Phishing Links) என பகிரப்படும் ஆபத்தான இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலமாக பயனர்களின் மின்னிலக்க நாணய பணப்பைகள் (Crypto wallets) ஹேக்கர்களால் முழுமையாக திருடப்படுகிறது.

மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
அதிகாரப்பூர்வ தளங்கள் மூலமாக போட்டிகளை காணவும் நுழைவு சீட்டுகள் வாங்கவும் அதிகாரப்பூர்வ ஒளி பரப்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்கள் அல்லது குறுஞ்செய்திகள் வழியாக வரும் சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

கிரிப்டோ பரிவர்த்தனைகளுக்கு இணைய வழியில் எவ்வித பர்மிட் சிக்னேச்சர் (Permit Signature) அனுமதியையும் தன்னிச்சையாக வழங்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடி கும்பல்கள் போலி இணையதளங்கள் மூலம் FIFA நுழைவுச்சீட்டுகள், உபயோகபூர்வ பொருட்கள் மற்றும் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பும் வசதிகள் தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் மற்றும் பிட்காயின்(Bitcoin) போன்ற மின் இலக்க நாணயங்களை ஏமாற்றி பறிக்கின்றனர் என சிங்கப்பூர் காவல்துறையினர் இது குறித்து தீவிர எச்சரிக்கை வழங்கியுள்ளது.

இதுபோன்ற சந்தேகத்திற்கு இடமான மோசடிகள் குறித்து அறிவதற்காகவும் உதவிகளை பெறுவதற்காகவும் Scamshield போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளை பயன்படுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK