சிங்கப்பூரில் முதல் ரோபோ..!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமானது முதல் ரோபோவை உருவாக்கியுள்ளது.
சேபிள் என்று அழைக்கப்படும் இந்த ரோபோ மிகவும் சிறியது. கட்டிடக் கூரைகள் மற்றும் பள்ளங்களில் ஏறி தேங்கி இருக்கும் தண்ணீரை சரி பார்க்கவும், கொசு இனப்பெருக்கத்தை கண்டறியவும் உருவாக்கப்பட்டுள்ளது.
கொறித்துண்ணிகள், உடைந்த தண்ணீர் குழாய்கள் அல்லது சேதமடைந்த மின் கம்பிகள் போன்றவற்றை சரி பார்ப்பதற்காக குறுகிய இடமாக இருந்தாலும் அங்கு அங்கு சென்று சரிபார்க்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவின் வடிவமைப்பானது முன் மற்றும் பின்புறம் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இவை நீண்ட நேரம் காட்சிகளை படம் பிடித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காட்சிகளை சேமித்து வைக்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டது.
இதன்மூலம் எளிதாக கண்காணிக்க முடியும். இந்த ரோபோவை ஆபரேட் செய்வதற்கு ஒரே ஒரு ரிமோட் மட்டுமே தேவையானது.
முக்கியமாக பூச்சிக்கொல்லி மூலம் கொசு இனப்பெருக்கத்தை அழிக்கும் திறனையும் இந்த ரோபோவில் ஒரு செயல்திறனாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் உள்ள சக்கரங்கள் பெரிதாகவும் மற்றும் உறுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை இயக்குவதற்கு ஒரு ரிமோட் ஆபரேட்டர் மட்டும் போதுமானது.
இந்த ரோபோவின் முதன்முதலாக ஜாலான் பெசார் நகர சபை இரண்டு மாதங்களுக்கு தவறான கூரைகளில் நீர் தேங்கி இருக்கிறதா என்பதை சரி பார்ப்பதற்காக இந்த ரோபோவை பயன்படுத்த ஆராய்ச்சி குழுவும் நகர சபைகளும் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக HDB அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளில் ரோபோவை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. உரிமம் வழங்குதல் மற்றும் வணிகமயமாக்கல் மூலம் இந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காக குழு தொழில்துறை கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த ரோபோவின் மூலம் இனிமேல் பாரம்பரியமாக கொசு இனப்பெருக்க ஆய்வுகளுக்கு கைமுறையில் பல தொழிலாளர்கள் பூச்சிக் கொல்லியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.