மலேசியாவில் மார்ச் 21ஆம் தேதி மற்றும் மார்ச் 24ஆம் தேதிகளில் 2 வெவ்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
மார்ச் 21ஆம் தேதி அன்று ஜாலான் பைப்பாஸ் புங்கை – செபானா கோவ் என்ற பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.இந்த காட்டுத் தீயால் அந்த இடத்தில் சுமார் 150 ஹெக்டர் நிலப்பகுதியானது பாதிப்புக்குள்ளானது.
மார்ச் 24 ஆம் தேதி அன்று பி பி ஆர் எனப்படும் பெங்கெராங் ஜோகூரில் உள்ள புங்காய் பகுதியிலும் காட்டு தீயானது உண்டாகியுள்ளது. தீ பரவியதில் 10 ஹெக்டர் பரப்பளவாானது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜோகூர் தீயணைப்பு மீட்பு பிரிவுத் தலைவரான சிட்டி ரொஹொனி 26 ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளார்.
👉🏻காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் தீயணைப்பாளர்கள் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக அவர் கூறினார்.
👉🏻35 தீயணைப்பாளர்கள், காவல்துறை, மற்றும் குடிமை தற்காப்பு படை போன்ற அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
👉🏻பாதிப்புக்குளளான பகுதியில் 85% தீயானது வெற்றிகரமாக அணைக்கப்பட்டு விட்டதாகவும், பல நாட்களாக இந்த தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
👉🏻ஜாலான் பைப்பாஸ் புங்கை – செபானா கோவ் பகுதியில் மட்டும் 127.5 ஹெக்டர் நிலப்பகுதியில் தீ அணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.